மதுரை மாநகராட்சியில் விஜிலன்ஸ் சோதனையில் வெள்ளி காசு, டம்ளர், தட்டு உள்ளிட்ட பொருட்கள், பணம் பறிமுதல்

391
Spread the love

மதுரை மாநகராட்சி நகர பொறியாளர் அலுவலக அறையில் தீபாவளி பரிசு பொருட்கள் அரசியல்வாதிகளுக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய அறையினுள் நகர பொறியாளர் அரசு மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அலுவலக ஊழியர்கள் என 8 பேரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் 5 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவடைந்தது.

சோதனையின் முடிவில் நகர பொறியாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்தி51 ஆயிரத்து 500 மற்றும் 11 வெள்ளி காசுகள், 2 வெள்ளி டம்ளர்கள், 2 வெள்ளி தட்டுகள் ஏராளமான இனிப்பு, பட்டாசு பெட்டிகளை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், மதுரை மாநகராட்சியின் நகர பொறியாளர் அரசு அவருடைய உதவியாளர் மனோகரன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சந்திரமோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

மதுரை மாநகராட்சியின் நகர பொறியாளர் அறையில் மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமரகுரு கண்ணன், அம்புரோஸ் ஜெயராஜ்,சூர்யகலா, ஹேமலதா உள்ளிட்ட 15 காவல்துறையினர் 5 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY