மா.பா எஸ்கேப் … அதிமுக அதிர்ச்சி..

645
Spread the love

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர், பாண்டியராஜன். தொழிலதிபரான இவர் மதிமுக, தேமுதிக அதன் பின்னர் அதிமுகவிற்கு மாறி மாறி அரசியல் செய்தவர். ‘மாபா’ என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் அமைச்சரான பின், இந்த நிறுவனத்தை அவரது மனைவி நிர்வகித்து வந்தார். நடந்து முடிந்த தேர்தலில்  ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார் மா.பா பாண்டியராஜன். அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணை செயலராகவும் உள்ளார். தேர்தலுக்கு பின்னர் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த மா.பா பாண்டியராஜன் மீண்டும் தொழிலுக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை தொடர்பு கொள்ளும் அதிமுக நிர்வாகிகளிடம் மாபா’ மனிதவள நிறுவனம், ஒரு காலத்தில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால், நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல்  இருந்ததால் கம்பெனி பின்னடைந்து விட்டது. எனவே தற்போது, தொழிலை கவனிக்க முடிவு செய்து, அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன் என பதில் கூறுகிறாராம் மா.பா பாண்டியராஜன். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்… 

LEAVE A REPLY