மகா.வில் ஒருவழியாக என்சிபி, காங்கிரசுக்கு துறைகள் ஒதுக்கீடு

163
Spread the love
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே கடந்த மாதம் முதல்வராக பதவியேற்றார். அவருடன்   கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.  ஆனால் துறை ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று துறைகள் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. சிவசேனாவுக்கு உள்துறை, என்சிபிக்கு  நிதி, வீட்டுவசதி, பொதுநலம், கூட்டுறவு  துறைகளும், காங்கிரசுக்கு வருவாய், எரிசக்தி, கல்வி, பொதுப்பணி, துணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY