திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு…. மகேஷ் எம்எல்ஏ பங்கேற்பு….

167
Spread the love

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று  அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்…….. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3  தொகுதிகளில் நிற்கின்ற வேட்பாளர்களை அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கிராம புரத்தில் வேட்பாளர் பெயர்களை சுவர் விளம்பரம் செய்ய வேண்டும், கழக தலைவர் அவர்கள் சொன்னது போல தமிழ் நாட்டில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில்  வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நிற்பது முத்தமிழ் அறிஞர் தான், நிற்பது உதயசூரியன் சின்னம் தான் என்கிற சிந்தனையோடு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், அவைத்தலைவர் வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர் பாலமுருகன் கோவிந்தராஜ் மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY