பத்திரிக்கையாளர்களை கொரோனா முன்களபணியாளர்களாக மம்தா அறிவித்தார்

95
Spread the love

மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வௌியிட்டு உள்ளார். அதில்….2020 தொடக்கத்தில் கொரோனா பரவிய காலம் முதல் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை ஆற்றி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவால் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் சுகாதார பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மட்டுமே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுகிறது. அனைவரும் அமைதியான முறையில் கொரோனா தடுப்பு பணியினை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மம்தாவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY