மணக்க.. மணக்க.. கொத்தமல்லி சாதம். …

50
Spread the love

தேவையான பொருள்கள்:- உதிராக வடித்த சாதம் – 2 கப் கடுகு, உளுந்து – தலா அரை ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மல்லித் தழை – 2 கட்டு மிளகாய் வற்றல் – 10 உளுந்து – 1 ஸ்பூன் பெருங்காயம் – தேவையான அளவு புளி – தேவையான அளவு எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு.  

செய்முறை: முதலில் மல்லி தழையை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு அதில் பெருங்காயம், மிளகாய் வற்றலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும். பிறகு உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி தழை போன்றவற்றை வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். வறுத்த எல்லா பொருள்களையும் மிக்சியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றவும். சூடான பிறகு அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து கொண்டு அதில் அரைத்த விழுதை சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளறி விடவும்.5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். வடித்த சாதத்தில் கொத்தமல்லி தொக்கை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளவும். கடைசியில் கொஞ்சமாக கொத்தமல்லியை தூவினால் சுவையான,மணமான கொத்தமல்லி சாதம் தயார். 

LEAVE A REPLY