திருச்சி அருகே கார்-பைக் விபத்து…ஒருவர் பலி

317
Spread the love

திருச்சி, மணப்பாறை அருகே உள்ள புதுமணியாரம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(55) . இவரது உறவினர் கோபிக்கண்ணன்(30). இருவரும் நேற்று மணப்பாறையிலிருந்து புதுமணியாரம்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருங்குளம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் திருவள்ளூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் பைக்கின் மீது மோதியதுடன், எதிர் ரோட்டில் சென்று கவிழ்ந்தது. இதில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் வெள்ளைச்சாமி மணப்பாறை ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த கோபிக்கண்ணன் மற்றும் காரில் வந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டார போக்குவரத்து, மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் உள்பட 4 பேர் மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY