மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

104

மான அவமானங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலை குலைந்து போகச் செய்யும் சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், தொழில் நஷ்டங்கள், உறவினர், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், சுக, துக்கங்கள் இவை எல்லாம், மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.’இவற்றை மன உறுதியுடனும், துணிச்சலுடனும், பொறுமையுடனும், எதிர்கொள்ளும் மனிதனே, மிகச் சிறந்த வெற்றியாளனாக விளங்குகிறான்!-‘இது, பகவான் கிருஷ்ணரின் உபதேசம்.

இன்றைய கால கட்டத்தில், நாம் எல்லாருமே, மேற்கூறிய ஏதாவது ஒரு விதத்தில், பாதிக்கப்பட்டுத்தான் இருப்போம். இதற்காக மனம் தளர கூடாது. தற்போதும் பெரிய வெற்றியாளர்களின் கடந்த காலங்களை பின்னோக்கி பார்த்தால் அவர்கள் மேற்கண்ட பலவற்றில் சிக்கி மீண்டவர்களாக இருப்பார்கள். இது ஒருவரின் பொறுமை, திறமையை சோதிக்கும் களமாக பார்க்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இதற்கான மனத்திண்மை வெளியில் இருந்து வராது. அதை நாமே வளர்த்துக் கொண்டால் பிரகாசமான எதிர்காலம் கைக்கு எட்டும் தூரத்தில். மனமே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY