மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

202
Spread the love

பல பிரச்சனைகள், தூங்கவே முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி” என்றவாறு ஒரு முனிவரிடம் வந்தான் அந்த இளைஞன். முனிவர் அவனிடம் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்கின்றன? என பார்த்து வா” என்றார். போய் பார்த்து விட்டு வந்து”100 மாடுகள் இருக்கு சாமி, எல்லா மாடுகளும் நிற்கின்றன” என்றான்.

 உனக்கு ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த 100 மாடுகளையும் தரையில் படுத்து தூங்க வைத்து விட்டு, அங்குள்ள ஓய்வறையில் நீ தூங்கி விட்டு காலை வா என்றார். காலை களைப்புடன் வந்த அவன், அய்யா, இரவு முழுவதும் தூங்கவே இல்லை” என்றான். ஏன்? என்ன ஆச்சு?” என்றார் முனிவர்.

100 மாடுகளையும் படுக்க வைக்க படாத பாடு பட்டும் முடியவில்லை. சில தானா படுத்து விட்டன. சிலவற்றை மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்க வைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன என்றான்.

முனிவர் சிரித்தபடியே, இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது! சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனை முடிந்தால் வேறு சில பிரச்சனை  எழலாம். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது. பிரச்சனைகள் குறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே.

தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கால ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு  நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!” என்றார். மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY