மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

144

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்முடைய பொறுப்புகள் அதிகமாவதை உணரும்போது உடல்மட்டுமின்றி மன அளவிலும் மிகுந்த தளர்ச்சியை அந்த எண்ணமே ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் நாம் அறியாமலேயே இது நம்மீது திணிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு வேலையை இழத்தல் அல்லது நோய் வாய்ப்படுதல் முதலியன.

சில விஷயங்களை நாம் அறிந்தே துன்புறுகிறோம். வியாபாரம் நஷ்டம் ஏற்படும் போது இன்னும் சிறிது காலம் செய்து பார்க்கலாம் என்று நினைத்து கடன் வாங்கியும் வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியாமல் கடனாளியானவர்கள் ஏராளம்.

மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நம்மால் நிச்சயமாக அடக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்திய, மன அழுத்த விஷயங்களைக் கூட மனவலிமையால்  அடக்கி அமைதியைப் பெறமுடியும் என்பதே! செய்த வேலை போனாலும் சேமிப்பு கொஞ்சமாவது இருக்கும் நிலையில் அடுத்த வேலை கிடைக்கும் வரை குடும்பத்தை காப்பாற்றலாம். இதற்கேற்றால்போல் திட்டமிடல் இருந்தால் சோதனையும் சாதனையே என்கின்றனர் அனுபவசாலிகள்! மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY