மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

172
Spread the love

பொதுவாக அன்றாட வேலைகளில் மூழ்கிப்போகும் மனிதர்களுக்கு தனிமை தேவையாக இருக்கிறது. இதுபோல நாமாக தேடிப்போகும் தனிமையில் இனிமையை காண முடியும். இதில் ஒருவித மன அமைதியை அனுபவிக்க முடியும். ஆனால் இதற்கு மாறாக தனிமை சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படும்போது அது மன அமைதிக்கு கேடாக அமைந்து விடுகிறது. இது போன்ற தனிமை என்பது நாம் வேலை செய்யும் நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், அதனால் பணியில் நெருக்கடி, அல்லது பணியை விட்டு விலகுதல், தொழிலில் எதிர்பாராத இழப்பு, குடும்பத்தின் பிரச்னை போன்றவற்றால் ஏற்படுகிறது.
இதற்கு நமது சூழ்நிலை மட்டுமே காரணம் என்று சிலர் தப்பிக்க முயற்சிப்பர். ஆனால் தனது வேலை, தொழில் போன்றவற்றில் சுயநலமாக, பிடிவாதமாக இருப்பது போன்றவற்றாலேயே இந்நிலை ஏற்படுகிறது. ஏனென்றால் இது போன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தாரை விட நண்பர்கள் வட்டத்திலிருந்து வரும் ஆறுதலே நமக்கு மன திடத்தை தரும். ஆனால் அதுபோன்ற சூழ்நிலையை கையாளாதவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். அதிலும் சற்று அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தவர்களுக்கு இதை தாங்க முடியாமல் மனதளர்ச்சி ஏற்பட்டு அது மன அமைதி கெடுத்து விடுகிறது. இதை மனதில் கொண்டு நமது பணியை செய்து வந்தால் இது போன்ற சூழ்நிலைகளை எளிதில் எதிர்கொள்ளலாம். மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY