மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

245
Spread the love

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதே மாதிரி துயரமும் ஒரு சுவை. இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது  கஷ்டமாகக் கூட இருக்கலாம் என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள்.  நாம் சிறுவயதில் இருந்தபோது நமது பெற்றோர் பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவதை பார்த்திருப்போம். அப்போது கசப்பான ஒரு பொருளை எப்படி ரசித்து, ருசித்து சாப்பிடுகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஆனால், மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ, அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை  நாம் வளர்ந்த பின் உணர்ந்திருப்போம்.

சிறுவயதில் இருக்கும் போது, இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை, என்று ஒரு முடிவெடுத்துக் கொண்டு சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடிவிடுவோம். அதே போல மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணர்ச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி விடுகிறோம். வாழ்க்கையில் நாம் அநேக உணர்ச்சிகளுக்கு கதவைத் திறப்பதில்லை. இதுபோன்று எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது, மனது தானாகவே அமைதி அடையும், திரைகள் விலகும், உண்மைகள் புரியும், வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மவுனமாக, மென்மையாக விரியும். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

LEAVE A REPLY