மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

156

வாழ்க்கையில், நாம் கொள்ளும் கோபமே நம்மை மறைமுகமாக தண்டிக்கும். இதை மனதில் இருத்தினால் மன அமைதி எந்நேரமும் கைகூடும் என்கின்றனர் ஆன்மிக பெரியோர். வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நாம்  எட்டலாம், யாராலும் தடுக்க முடியாது. குறிக்கோள் என்ன என்பதை உணர வேண்டும். நம் மீது நமக்கு இருக்கும் அன்பும், காதலும் மற்றவர்கள், மற்ற விஷயங்களின் மீதும் ஏற்பட வேண்டும். அது நிகழ்ந்தால், இந்த புவியின் அழகை  முழுமையாக உணர முடியும்.

இதில் கடவுள், படைப்பின் அற்புதத்தை அறிய முடியும். இதன்மூலம் அமைதி சாத்தியமாகும். எதை வேண்டுமானாலும் மறைத்துவிட முடியும். ஆனால், உண்மையை மறைப்பது என்பது முடியாத காரியம். உண்மை என்பது சூரிய சந்திரர்களை போன்றது. அழிவில்லாதது, மறைக்க முடியாதது. வாழ்வில் உண்மையை கடைப்பிடிக்க முயல வேண்டும். எண்ணங்கள் உயர்வாக இருந்தால், வாழ்வில் உயரத்தை அடைவதோடு, நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வும் நிலையாக கிடைக்கும். எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலே. மனேசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY