மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

68

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான பின் ஒருநாள் பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றார். அங்கு தனியாக அமர்ந்திருந்த ஒருவரை அழைத்து தன்னுடன் அமர வைத்து உணவருந்தினார். பின்னர் அவர் சென்றபின் ஒரு வீரர் மண்டேலாவிடம். அந்த மனிதர் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போல கைகள் நடுங்குகிறதே என்றார். அதற்கு இல்லை அவர் நான் முன்னர் சிறையில் இருந்த போது, இவர்தான் சிறைக் காவலர். என்னை அடிக்கடி கொடுமைப்படுத்துவார். தண்ணீர் கேட்டால் என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்.

இப்போது அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு நான் அதிபராக இருப்பதால், அவரை தண்டிப்பேன் என நினைத்து நடுங்கினார். ஆனால் அது என் குணமல்ல. பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டியெழுப்பாது. அழித்து விடும். அதே நேரம் சில விஷயங்களில் சகிப்புத் தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும் என்றார் மண்டேலா. மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY