சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருப்பதாவது; வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் கடல்காற்று ஜனவரி முதல் வாரம் வரை நீடித்தாலும், மழையை கணக்கிடும்போது, 31 ஆம் தேதி வரைதான் கணக்கிடுவோம். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் நிறைவடைகிறது.

ஜனவரி 10 ஆம் தேதி முதல் மழை பெய்தால் குளிர்கால மழையாக கணக்கில் எடுத்துக் கொள்வோம். வடகிழக்கு பருவமழையால் அதிக சேதாரம் ஏற்படவில்லை. வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் தான் 17 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீர் நிலைகளில் அதிகமாகவே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

LEAVE A REPLY