இளைஞருக்கு கட்டாய திருமணம்….

157
Spread the love

பீஹாரில் உள்ள வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித், 25. சமீபத்தில், காய்கறி வாங்குவதற்காக, தன் தந்தையுடன் சந்தைக்குச் சென்றார்.அப்போது, 5 பேர் அடங்கிய கும்பல், அமித்தையும், அவரது தந்தையையும், துப்பாக்கி முனையில் வழிமறித்தது.  அவர்களிடமிருந்து அமித்தின் தந்தை தப்பி ஓடினார். அமித்தை மட்டும், அந்த கும்பல், காரில் கடத்திச் சென்றனர். அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்ற அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்த இளம் பெண்ணுக்கும், அமித்துக்கும், கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அமித்தின் தந்தை ஓடி போய் போலீசில் புகார் செய்தார். போலீசார் அமித்தை மீட்டனர்.  அந்த இளம் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு, எதற்காக அமித்தை, அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தனர் என்று அமித்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அந்த இளம் பெண், தன் பெற்றோருடன் கிராமத்தில் வசித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY