15 ஆயிரம் கடனுக்கு 13 வயது சிறுமிக்கு திருமணம்

164
Spread the love

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கவுண்டனூர் கிராமம் உள்ளது.  இவ்வூரை சேர்ந்தவர்கள் மூக்கன்-அஞ்சலை தம்பதி. இவர்கள் மகன் சரவணக்குமார் (23). மூக்கனிடம் கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் ஆதனூரை சேர்ந்த ஒரு தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினர். குறித்த நேரத்தில் கடனை அவர்களால் திருப்பி தர இயலவில்லை. இதனால் மூக்கன் தரப்பில் கடும் நெருக்கடி தந்தனர்.

இதையடுத்து கடனுக்காக பள்ளியில் படிக்கும் அவர்களின் 13 வயது மகளை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு திருமணம் செய்து தருவதாக பேசி முடிக்கப்பட்டது. சிறுமி மறுத்தும் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி குஜிலியம்பாறை கரிக்காலி பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. 5 மாதமாக சரவணக்குமாருடன் குடும்பம் நடத்திய சிறுமி எப்படியோ  குழந்தைகள் நல உதவி மையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து எஸ்பி பாண்டியராஜன் உத்தரவின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் சரவணக்குமாரையும், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 5 பேரும் அடைக்கப்பட்டனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

LEAVE A REPLY