திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி அண்ணாநகர் சொசைட்டி தெருவை சேர்ந்தவர்கள் கருப்பையா- ராணி தம்பதி. ராணி துவாக்குடி நகர மகளிர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர்களின் மகன் கதிரவன். இவருக்கும் அதே பகுதி 13 வது வார்டு திமுக அவைத்தலைவர் ராஜூ- ராஜம்மாள் தம்பதியின் பேத்தி வளர்மதியின் மகள் ஷியாம்லி என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்தனர். இந்நிலையில்  திருமணத்தை சென்னையில் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடத்த முடிவு செய்தனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேருவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், கே.என். நேரு முன்னிலையிலும் கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் நடைபெற்றது. மணமக்களை ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்தினர். இந்நிகழ்வில்  சேகர்பாபு எம்எல்ஏ, பகுதி செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY