திருமணம் ஆனதை மறைத்து வாலிபருடன் காதல்… காதலியின் வீட்டிலேயே தற்கொலை…

166
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தையடுத்த புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அம்ரின் (25) இவரது கணவர் அஜீஸ் இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்  சமூக வலைதளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (21) என்பவருடன் அம்ரின் பழகி வந்துள்ளார். பூபதி தனியார் ஸ்கூலில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

திருமணம் ஆகாத பூபதியிடத்தில் அம்ரின் காதல் வார்த்தை பேசி வந்துள்ளதாக தெரிகிறது. பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் கடந்த 7 மாதங்களாக சமூக வலைதளத்தில் அம்ரின் ஆசை வார்த்தைகள் பேசி வந்துள்ளார். இதையடுத்து, அம்ரீனை பார்க்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியும் வாங்கி சென்றுள்ளார். அப்போது, அம்ரீன் வீட்டில் இல்லை. அவரின் குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தைகளிடத்தில் நீங்கள் யார் என்று பூபதி கேட்டுள்ளார். அப்போது, அமரினுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது கணவருடன் வசிப்பதும் பூபதிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால், பூபதி மிகுந்த மன வேதனையடைந்துள்ளார். மன உளைச்சலுக்குள்ளான அவர் அம்ரின் வீட்டில்லேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அம்ரின் வீட்டுக்கு வந்த போது, பூபதி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, புதுப்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கு நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அம்ரினை திருமணம் செய்து கொள்வதற்கு பூபதி எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும் அவரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பூபதியின் தந்தை தனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி புதுப்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார், வழக்கு பதிவு செய்த போலீசார் அம்ரினிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY