அமைச்சர் நிர்மலாவுக்கு மாருதி சுஸுகி பதில்!

270
Spread the love

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சில நாட்களுக்கு முன் சென்னையில் அளித்த பேட்டியின் போது, ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களின் வாகன புழக்கத்தின் காரணமாக  வாகன விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இ.எம்.ஐ செலுத்தி வாகனங்கள் வாங்குவதில் விருப்பம் காட்டாமல், பொது வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து மாருதி சுஸுகியின் இந்திய இயக்குநர் சஷாங் ஸ்ரீவஸ்தா தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கால்பதித்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. விற்பனை மந்த நிலை அப்போது முதல் ஏற்படாமல், இப்போது ஏற்படுவது ஏன்?. கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதி முதலே வாகன விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போதுதான் அது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.

ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகமானபோது, இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் என பல தரப்பினர் அதில் இணைந்து பணியாற்ற தொடங்கினர். அது, தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் நாட்டின் வாகன விற்பனை வளர்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவின் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு நாட்டில் நிலவும் வாகன விற்பனை சரிவு தான் காரணம் என முழுமையாக கூறிவிட முடியாது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY