மாஸ்க் போடாம பேசாதீங்க..ஆத்திரத்தில் அடித்து உதைத்த மேனேஜர்..

65
Spread the love
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாநில அரசின் சுற்றுலாத் துறை ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அங்கு மேலாளராக பணிபுரிபவர் பாஸ்கர் ராவ். இவர் அதே ஓட்டலில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த பெண்ணிடம் பேச முயன்ற போது, அந்த பெண் மாஸ்க் அணிந்து கொண்டு பேசுமாறும் மாஸ்க் அணியாமல் எங்களிடம் பேச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பாஸ்கர், நீ எல்லாம் எனக்கு அறிவுரை வழங்கக் கூடாது’ என்று கூறிக்கொண்டே அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அங்கிருந்து கட்டையால் அவரை தாக்கியிருக்கிறார்.
 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் அங்கிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. அது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில், தர்க்கா மிட்டா காவல்துறையினர் பாஸ்கர் ராவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY