ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலி… பெண் தற்கொலை..

218
Spread the love

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் எனும் நகரில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், பால்கிக்ஷன் என்பவரின் குடும்பத்தில் அவரது மனைவி சந்திரகலா, மூத்த மகன் சஞ்சய் மற்றும் இளைய மகன் ஸ்வபினீஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்த கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த உயிரிழப்புகளை நேரில் கண்டு கடும் துக்கத்தில் இருந்த இளைய மருமகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY