விவசாயிகளுக்கு ஆதரவு.. திமுக கூட்டணியினர் திருச்சியில் ஆர்பாட்டம்..

83
Spread the love

மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சியில் இன்று அனைத்துக் கட்சி போராட்டம் நடைபெற்றது. திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தை துவங்கி வைத்து திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பேசும்பொழுது…. போலீசார் தீவிரவாதிகளை தடுப்பது போல தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து வருகிறார்கள். இந்த சட்டத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல நுகர்வோரும் தான்.

          

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மௌனமாக உள்ளதோடு, நல்ல சட்டம் என்று பரப்புரை நடத்தி வருகிறார். தமிழகத்தின் இந்த சட்டம் நுழையவிடாமல் கூட்டு முயற்சி எடுத்து திமுக தடுக்கும் என்று அவர் பேசினார். மக்கள் அதிகாரத்தினர் பாடல்களை பாடி கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தின்போது கஞ்சித்தொட்டி திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

LEAVE A REPLY