தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

179
Spread the love

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 4 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.

 

LEAVE A REPLY