அடுத்த சில நாட்களில் மழைக்கு வாய்ப்பு..

79
Spread the love

வானிலை ஆய்வு  மையம் வெளியிட்ட அறிக்கையில்,  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நாளை மறுநாள் (12ம் தேதி) தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில்  பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY