7மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

635
Spread the love

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடமாவட்டங்கள், தொடர்ச்சி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யலாம்.ஜூலை 21, 22ல் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஜூலை23 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடலில் மணிக்கு 50 – 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY