மேகதாது விவகாரம்… சட்டசபையில் தீர்மானம்

157
Spread the love
 

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தொலைவில் உள்ள மேகதாது என்ற இடத்தில், ரூ.6 ஆயிரம் கோடி செலவில்  புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணை மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்க முடியும். இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில், புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இது குறித்து விவாதிக்க தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர்  “மேகதாது அணை தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவிரி படுகையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம்” என்றார்.

இதன்பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப் பேரவையை கூட்டியதற்கு நன்றி. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது: தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன். அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது கொதிப்படைய வைத்துள்ளது” என்றார். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

LEAVE A REPLY