என்னய்யா இப்படி பண்றீங்களேய்யா!… இயக்குனர் மீது MeToo புகார்

286
Spread the love

மீ டூ புகார் பல துறைகளிலும் எழுந்தாலும், திரையுலகில்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லேட்டஸ்டாக மலையாள இயக்குனர் ஹரிஹரன்  மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில்.  ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடம் என்ற போதிலும், மம்மூட்டிக்கு மனைவி என்பதால் பூஜையிலும் கலந்து கொண்டேன். அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது இயக்குனர் ஹரிஹரனிடம் என்னை  மாலையில் சந்திக்க வேண்டும் என்றார். நான் முடியாது என்றேன். ஆனால் அவர் என்னை பார்க்கவே வந்திருப்பதாக கூறி, கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றார்.

நான் மாலை சென்னை திரும்ப வேண்டும் என்று கூறினேன். ஆனால் இயக்குனர் ஹரிஹரன், அதெல்லாம் முடியாது உங்களை பார்க்கதான் நான் இங்கு வந்தேன் என்றும், கண்டிப்பாக இருங்கள் என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை கடுமையாக திட்டிவிட்டு சென்னை திரும்பிவிட்டேன். இப்போது, அவரைப் பற்றி வெளியில் சொன்னதும், அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவர் பெரிய ஆள் என்று சொல்றாங்க. அவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் ஏன் அப்படியெல்லாம் செய்றாங்க. அன்றைக்கு எனக்குரிய வாய்ப்பு பறி போனபோது யாரும் வரவில்லை. அதோடு, அப்படி வாய்ப்பு பறிபோனதால்தான் இப்போது நான் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY