திருச்சி எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுகவினர் போராட்டம்

426
Spread the love

திருச்சி மரக்கடை பகுதியில் 1995ம் ஆண்டு, திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய உருவ சிலை நிறுவப்பட்டது. அப்போதைய அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், நல்லுசாமி ஆகியோர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தனர். இந்த எம்.ஜி.ஆரின் சிலை இன்று மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அங்கு திரண்ட அதிமுகவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து

நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது…..மரக்கடை பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து,  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

LEAVE A REPLY