மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம் .. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா

209
Spread the love

மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. குறிப்பாக பாஜ மற்றும் சிவசேனா கட்சிகள் இடையே யார் முதல்வர் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. மகாராஷ்டிராமாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதே சமயம் மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்நிலையில் இன்று மாலை மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிவை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். அப்போது அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதன்பின் பேட்டியளித்த பட்னாவிஸ்,எனது ராஜினாமாவை ஆளுனர் ஏற்றுக் கொண்டார் என்றார்.

LEAVE A REPLY