ராகுல் இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும்… கிரிராஜ் சிங்

142
Spread the love

குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னாள் காங்., தலைவர் காங்., ராகுல் சமீபத்திய பொதுக்கூட்டங்களில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுமாறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், அவற்றில், பாஜ., அரசு குறிப்பிட் சமூகத்தினருக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய விலங்குகள் பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ராஞ்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்., கட்சி இரட்டைத்தர கொள்கையிலிருந்து விலக வேண்டும். பொய்களைப் பேசுவதன் மூலம் நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. ராகுலுக்கு, இந்தியாவில் ஊடுருவியவர்கள் மீது அன்பு இருந்தால், அவர்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லட்டும். குழப்பத்தை பரப்பி, அச்சத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது என்றார் கிரிராஜ் சிங். 

LEAVE A REPLY