சென்னையில் சிக்கினார் விஜயபாஸ்கர்… விஜிலன்ஸ் தீவிர விசாரணை..

966
Spread the love

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(53). கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அமைச்சராக இருந்த போது வாகன வேக கட்டுப்பாட்டு கருவி வாங்க விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இழப்பீடுகள் குறித்து  லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை அதிரடியாக சோதனை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் ஆண்டாங்கோயில் உள்ள அவரது வீடு, அதே பகுதியில் உள்ள அவரது தம்பி எம்.ஆர்.சேகரின் வீடு, அங்குள்ள சாயப்பட்டறை, அவரின் உதவியாளர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகியோரின் வீடுகள், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள சாய் அபார்ட்மெண்ட், மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 21 இடங்களில் இன்று காலை அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறுவதை 

  அறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இந்த நிலையில் சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள அப்பாட்மெண்ட்டில் விஜயபாஸ்கர் இருப்பதாக தகவல் கிடைத்து விஜிலன்ஸ் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயபாஸ்கர், உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட விசாரணையில் 64 சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாவும் இவை குறித்து விஜயபாஸ்கரிடம் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயபாஸ்கரின் தம்பி சேகரிடம் விஜிலன்ஸ் போலீசார் கரூரில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடதக்கது..

LEAVE A REPLY