விஜயபாஸ்கர் ஒதுக்கப்பட்டதால் ரேபிட் டெஸ்ட் கிட் வருவதில் தாமதம்?

2777
Spread the love

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அதன் பின்னரே அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும் என்கிற  நிலை உள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளன.  இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள்  ஒன்றுக்கு 700 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தான் இந்த ரேபிட் சோதனையை கருவி குறித்து அவற்றை சீனாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடியாக வாங்க முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. 50000 ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கவும் விஜயபாஸ்கர் ஆர்டர் கொடுத்திருந்தாகவம் தெரிகிறது. ஆனால் தற்போது விஜயபாஸ்கர் ஓரங்கட்பட்டு விட்டதால் ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்குவது தொடர்பாக அமைச்சர் தான் பேசி வந்தார். அவர் தற்போது ஒதுக்கப்பட்டு விட்டதால் யாரும் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசாமல் விட்டு விட்டார்கள், தற்போது அதிகாரிகள் சீனா நிறுவனத்திடம் கேட்டதற்கு தமிழகத்திற்கு வரவேண்டிய 50000 ரேபிட் டெஸ்ட்  கிட் அனைத்தும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு விட்டதாக அவர்கள் கூறிவிட்டனர். இது தான் ரேபிட் டெஸ்ட் கிட் வராமல் இருப்பதற்கான காரணம் என்றார் . 

LEAVE A REPLY