டாஸ்மாக் திறப்பு ஏன்? .. அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

305
Spread the love

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சேலத்தில் அளித்த பேட்டி….தமிழகத்தில் உச்சகட்டமாக 36 ஆயிரம் பேருக்கு தொற்றிருந்தது அரசின் நடவடிக்கை காரணமாக பாதியாக குறைந்துள்ளது  தமிழகத்தில் வரும் 14ஆம் தேதியில் இருந்து தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை  கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்த போதிலும் கர்நாடகாவில் மதுபானகடைகள், தடையின்றி செயல்பட்டது.ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு தான் இருந்தது. தொற்று குறைந்த காரணத்தினாலேயே மதுபான கடைகளை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலனில் முதல்வர் அக்கரை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களிலும் உள்ள மதுபான கடைகளில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு காவல்துறை உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், மேலும் மதுபானம் வாங்க வருவோர், முககவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளி விட்டு தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இருந்து, தொற்று குறையாமல் உள்ள 11 மாவட்டங்களில் மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதே போல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் மதுவினை,தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடத்தல் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகம் கள்ள சாராயம் இல்லாத மாநிலமாக மாறும். பாஜக ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் தொற்று குறையாத நிலையிலும் மதுபான கடைகள் 2 மணி வரை விற்பனை செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,  தமிழகத்தில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்?  பாஜக அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தான் இந்த போராட்டம் என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி.. .

LEAVE A REPLY