சட்டத்திருத்தத்தை எதிர்த்து திருச்சியில் இ.பி சங்கங்கள் ஆர்ப்பாட்டம்..

90
Spread the love

ஆர்ப்பாட்டம் திருச்சிராப்பள்ளி ஆக, 10, மின்சார சட்டத்திருத்தம் 2020 ஐ திரும்பப் பெற வேண்டும். முடக்கப்பட்ட டி.ஏ, லீவு சரண்டர் சலுகைகளை உடனே வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தொமுச மலையாண்டி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ராஜமாணிக்கம், எம்பிளாய்ஸ் பெடரேஷன் சிவசெல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் பெடரேஷன் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்புரம், லால்குடி, முசிறி,, ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை ஆகிய பகுதிகளில் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY