காணாமல் போன இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு….

58
Spread the love
கோவை, சிங்காநல்லூர், ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர்  போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கிணற்றில் 24 வயது இளம் மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து இருந்த வாலிபரின் உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்குமார் என்பதும்,மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அருண்குமார் 2 நாட்களுக்கு முன் வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்றுவிட்டதாகவும்,காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் சிங்கநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் அருண்குமார் எப்படி இறந்தார் என்ன நடந்து என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY