கலப்பு திருமணம்.. கணவனை தூக்கி செல்ல பெண்ணுக்கு தண்டனை

483
Spread the love
போபாலில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் தேவிகார் பகுதியில் 20 வயதை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேறு சாதி ஆணை காதலித்தார். இதையடுத்து அவரை திருமணமும் செய்து கொண்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் ஜாதியினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்தனர். திருமணம் செய்து கொண்ட கணவரை தோளில் சுமந்தபடி நீண்ட தூரத்துக்கு நடந்து செல்லுமாறு கூறினார். இதற்கு தயங்கிய அப்பெண்ணை அந்த சமூகத்தினர் மிரட்டினர். வேறு வழியின்றி அந்த பெண், தன் கணவரை தோளில் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அப்போது அந்த பெண்ணின் பின்னால் ஏராளமான ஆண்கள் வந்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY