திருச்சி எம்எல்ஏ ஆபீசுகளுக்கு சீல்…..- படங்கள்

494
Spread the love

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வௌியிட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. எப்போ… எப்போ… என்று காத்திருந்தது போல அரசு அலுவலர்கள் அறிவிப்பு வந்த சில மணித்துளிகளிலேயே நடவடிக்கையை தொடங்கினர். முதற்கட்டமாக திருச்சியில் உள்ள எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.நேரு அலுவலகத்தினை பூட்டி சீல்

வைக்கப்பட்டது. மேலபுலிவார்டு ரோட்டில் உள்ள கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் சேர்கள், கொடிகள், பேனர்கள், ஏசி மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அகற்றப்பட்ட பிறகு பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

LEAVE A REPLY