ஆதரவற்ற மாணவியை தத்தெடுத்த ”எம்.எல்.ஏ ரோஜா”….

111
Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மாணவி புஷ்பகுமாரி. இவர் திருப்பதியில் உள்ள பெண் குழந்தைகள் நல மையத்தில் தங்கி படித்து வந்திருக்கிறார். கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பை முடித்த அவர், மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். ஆனால், மருத்துவ படிப்பில் சேர பண வசதி இல்லாததாலும் உதவி ஏதும் கிடைக்காததாலும் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் இந்த மாணவி தவித்து வந்துள்ளார்.

 

மாணவியின் கனவையும், கஷ்டத்தையும் அறிந்த ரோஜா, அந்த மாணவியை தான் தெடுத்துடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன் படி, இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த மாணவியை தத்தெடுத்துள்ளார்.

மேலும், மருத்துவ படிப்புக்கு ஆகும் முழு செலவையும் தானே ஏற்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். தன் மருத்துவர் கனவு நினைவாகப் போவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்த மாணவி புஷ்பகுமாரி, ரோஜாவிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY