ம.நீ.ம 2+2 இல்லை

264
Spread the love
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் நேற்று முன்தினம் ( 26ம் தேதி) நிறைவடைந்தது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் பெரம்பலூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் கால தாமதமாக வந்ததால் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. இந்நிலையில் மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. இதில் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சியின் தங்கராஜ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோல மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனுவும், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் குப்புசாமியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

LEAVE A REPLY