ராகுலை டியூப் லைட்டுடன் ஒப்பிட்டு பேசிய மோடி

211
Spread the love

சமீபத்தில் பிரதமர் மோடி சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோ வெளியானது. இதனை கிண்டல் செய்த ராகுல், டில்லியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய போது, வேலைவாய்ப்பை வழங்காவிட்டால் இளைஞர்களே மோடிடைய பிரம்பால் அடிப்பார்கள் எனவும் கடுமையான வார்த்தைகளால் பேசினார். இந்நிலையில் லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றி மோடி, ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையிலும் அவரை டியூப் லைட் என்றும் கிண்டல் செய்தார். இன்று பாராளுமன்றத்தில் மோடி பேசுகையில், 6 மாதங்களில் இளைஞர்கள் என்னை பிரம்பால் அடிப்பார்கள் என காங்., தலைவர்கள் பேசியது உண்மை தான். அதற்கு ஆட்களை சேர்ப்பது கடினம் தான். அதற்கு தயாராக 6 மாதம் தேவை தான். நானும் ஒன்றை முடிவு செய்விட்டேன், அடுத்த 6 மாதங்களில் எனது சூர்ய நமஸ்காரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளேன்.

கடந்த 20 ஆண்டுகளாக அவதூறு பேச்சுக்களை தாங்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் எனது முதுகையும் போதுமான அளவிற்கு வலிமையாக்கி வைத்துக் கொள்கிறேன். எனது உடற்பயிற்சியை அதிகரித்துக் கொள்ள எனக்கு 6 மாதம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அப்போது எழுந்து குறுக்கிட்ட ராகுல், அவையில் அமளி நிலவுவதால் நீங்கள் பேசியதை சரியாக கேட்க முடியவில்லை என்றார். அதற்கு பதிலளித்த மோடி, நான் 30 முதல் 40 நிமிடங்களாக பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது தான் கரன்ட் வந்துள்ளது. சில டியூப்லைட்கள் இப்படி தான் வேலை செய்கின்றன என்றார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்ததை அடுத்து, ராகுல் வேகமாக அமர்ந்தார்.

LEAVE A REPLY