பொன்னார் கருப்புகொடி கோரிக்கை நிராகரிப்பு

157
Spread the love

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவை  விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தூத்துக்குடி கலவரம், வன்முறைக்கு முழு காரணம் போலீசும், இந்த அரசும் தான் என்பதை காணொலி ஆவணங்களுடன் முகிலன் வெளியிட்டு இருக்கிறார். இது தவிர… மேலும் பல புகைப்பட ஆவணங்கள் இருப்பதாக முகிலன் கூறியிருக்கிறார். சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்ட அவர் இன்று வரை காணவில்லை. அவர் காணாமல் போனதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு.  திருச்சி தொகுதியில் நான் போட்டியிடுவதாக வந்த தகவல் உண்மையல்ல. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருக்கிறது. கஜா புயல் விவகாரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்திருக்கிறது. எனவே பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். அறவழியில் இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.

முன்னதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY