திருச்சியில் பண மோசடி செய்த பெண் சிக்கியது எப்படி?

398
Spread the love

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்- லட்சுமி தம்பதி ஒன்றரை லட்சம் ரூபாய் வரை தங்கள் பெயர்களில் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றுத் தந்தனர். இதற்காக சில ஆயிரம் ரூபாய்களை  அந்த தம்பதிக்கு பூங்கொடி கொடுத்திருக்கிறார். ஆனால் சொன்னபடி பூங்கொடி கடன் தவணையை செலுத்தவில்லை.

இதனால் நெருக்கடிக்குள்ளான அந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், லட்சுமி இறந்தார். பாஸ்கர் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அரியமங்கலம் போலீசார், தலைமறைவான பூங்கொடியை தேடி வந்தனர்.

இந்நிலையில் வீட்டை காலி செய்வதற்காக  பூங்கொடி வந்தார்.இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பூங்கொடியை கைது செய்தனர்.

LEAVE A REPLY