Spread the love

விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இந்த மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த அனி மெக்லைன் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜூன் மாதம் மீண்டும் பூமிக்கு திரும்பினார். இவர் விண்வெளியில் இருந்தபோது தனது வங்கிக் கணக்கை கையாண்டதாக அவரது தன்பாலின துணையான சம்மர் வுடன் என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து நாசா, அனியிடம் விசாரணை நடத்தயிருக்கிறது. இது குறித்து அனி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்த புகாரில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபற்றி மேற்கொண்டு கருத்து கூற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY