சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தனது மனதை விட்டு நீங்காத ஒரு சிறப்பு வாய்ந்த படைப்பு என்று நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகைகளான குஷ்பு, சினேகா, ரெஜினா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்று குறிப்பிட்ட அவர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் வரும் நவ.6-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘மூக்குத்தி அம்மன் 2’ மனதுக்கு நெருக்கமான படம்: நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி
