குழந்தையின் அழுகுரல் கேட்டு கண்விழித்த ‘கோமா தாய் ’

199
Spread the love
வடக்கு அர்ஜென்டினா மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் மூன்று குழந்தைகளுக்கு தாயான 42 வயது பெண் மரியா லாரா ஃபெரேரா. கடந்த மாதம் இரு சக்கர  வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து சுயநினைவை இழந்தார். அதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபெர்ரேராவின் இளைய மகள் (2 வயது) மருத்துவமனைக்கு வந்திருந்தாள். திடீரென வீட்டில் வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாயிடம் கண்ணீர் விட்டு கேட்டிருக்கிறாள். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த ஃபெரேரா, தன் குழந்தை மழலை குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்பால் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்த குடும்பத்தினர் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் மரியா லாரா ஃபெரேரா இன்னும் முழுமையாக சுயஉணர்வை அடையவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY