Spread the love

பொதுவாக தங்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர்.அதிலும் அரசியல்வாதிக், நடிகர்கள் பிறந்தநாள் என்றால் கேட்கவே வேண்டாம். நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என்று கலக்கிவிடுகின்றனர். மற்றபடி தனிநபர்கள் தங்கள் பிறந்த நாளை அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடுகின்றனர். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் புதுவையில் ஒருவர் தனதுதாயின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது தாயின் பிறந்த நாளுக்கு மதுபாட்டில், பிரியாணி என்று வழங்கி அசத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைக்க வரிசையாக வந்து மதுபாட்டிலையும், பிரியாணி பார்சலையும் வாங்கிச் செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY