மோடினாமிக்ஸ்..நிர்மலானாமிக்ஸ்..பப்ளிக்னாமிக்ஸ்..சிங்வி பாய்ச்சல்!

44
ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா தெரிவித்திருந்தார்.
 

 நிர்மலாவின் இந்த விளக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியிருப்பதாவது; ‘பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் 50 மில்லியனை தாண்டி விட்டனர். பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிடும் என்றால் எப்படி?. இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என்று கூறுவீர்களா? ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கி விட்டார்களா?. எது நல்லது நடந்தாலும், எங்களால் செய்யப்பட்டுள்ளது (மோடினாமிக்ஸ்). எது கெட்டது நடந்தாலும், மற்றவர்களால் (நிர்மலானாமிக்ஸ்) செய்யப்பட்டது. பிறகு, மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (பப்ளிக்னாமிக்ஸ்). இவ்வாறு சிங்வி கேட்டிருக்கிறார்.


Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY