திருச்சியில் மூட்டைகள் சரிந்து ஒருவர் பலி…

64
Spread the love

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(60). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காவேரி லாரி புக்கிங் அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தார். இந்நிலையில் லாரி ஒன்றில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூட்டைகள் சரிந்துள்ளது. அதில் அவர் சிக்கிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY