அதிமுக எம்பியை முற்றுகையிட முயன்ற இஸ்லாமிய இளைஞர்கள்

222

தஞ்சாவூரில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திடம் குடியுரிமை சட்டம் பற்றி கேள்வி கேட்க வந்த இனைஞர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தஞ்சாவூரில் நேற்றிரவு எம்ஜிஆர் பிறந்தநாள் விழா அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைத்தியலிங்கம் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அக்கூட்டத்திற்கு வந்த த வைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமிய இளைஞர்கள் சிலர்  முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது குறித்து இஸ்லாமிய இளைஞர்கள் கூறுகையில் குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பது ஏன்? இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது ஏன்? என வைத்தியலிங்கத்திடம் கேள்வி கேட்ட இருந்தாக கூறினர். கூட்டம் முடியும் வரை அந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

LEAVE A REPLY